1. தமிழகம் முழுவதும் இபாஸ் முறை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும்.
2. அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
3. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதி.
4. சென்னையில் மெட்ரோ ரயில் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி.
5. வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. எனினும் வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி கிடையாது.
6. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணிவரை இயங்கலாம்.
7. டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணிவரையிலும் இயங்க அனுமதி.
8. தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தவிர்க்க முடியாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
9. ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி.
10. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், திறக்க அனுமதி.
11. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி.
12. அரசு அலுவலகங்கள் செப்.1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்.
13. வங்கிகள், மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
14. நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு வெளியூர் சுற்றுலாத்தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இபாஸ் பெற வேண்டும்.
15. திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரே சமயத்தில் 75 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி.
16. ஞாயிற்றுகிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழுமுடக்கம் ரத்து.
17. மாநிலங்களுக்கு இடையேயான் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் அனுமதி. மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் செயல்பட செப்.15 வரை அனுமதி கிடையாது.
Click to rate this post!
[Total: 0 Average: 0]