செஸ் உலகக்கோப்பை அரையிறுதிக்கு தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாதனை
உலகக் கோப்பை செஸ் தொடர் (International Chess) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் நடைபெற்றது.
டை பிரேக்கர் முறை
(International Praggnanandhaa vs Magnus Carlsen Chess World Cup 2023 Final Moves to Tie Breakers)
இறுதிப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்த நிலையில் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்படுகிறது. செஸ் போட்டியில் மிகவும் குறுகிய கால போட்டியாக கருதப்படும் ராபிட் செஸ் முறை வெற்றியாளரை தீர்மானிக்க கடைபிடிக்கப்படுகிறது.
- முதல் டை பிரேக்கரில் இரண்டு போட்டிகள் நடைபெறும்.
- இதில் 25 நிமிடத்திற்குள் போட்டிகள் முடிக்கப்படும் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக பத்து வினாடிகள் அவகாசம் வழங்கப்படும்.
- இதில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படவில்லை என்றால் இரண்டாவது டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படும்.
- அதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். இதன் கால அளவு வெறும் 10 நிமிடங்கள் தான்.
- ஆனால் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக பத்து வினாடிகள் வழங்கப்படும்.
- இதிலும் வெற்றியாளர் யார் என்று தெரியவில்லை என்றால் மூன்றாவது டைபிரேக்கர் வழங்கப்படும்.
- இதில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும் ஆனால் இந்தப் போட்டி வெறும் ஐந்து நிமிடம் தான் கால அளவு ஒவ்வொரு நகர்த்தலுக்கும் மூன்று வினாடிகள் கூடுதலாக வழங்கப்படும்.
- இதுவும் சமணில் முடிந்தால் சடன் டெத் என்ற ஒரே ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்று விடுவார்கள் என அறிவிக்கப்படும்.
ராபிட் ரவுண்டு
கிளாசிக்கல் செஸ் வகையில் கார்ல்சன் கை ஓங்கி இருக்கும் ஆனால் ராபிட் என மின்னல் வேகத்தில் போட்டியில் கார்ல்சனை மூன்று முறை தொடர்ந்து பிரக்ஞானந்தா தான் வீழ்த்தி இருக்கிறார்.
சர்வதேச செஸ் (International Chess)
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கிடையில், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், பயிற்சியாளர் ரமேஷ், இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
International Praggnanandhaa vs Magnus Carlsen Chess World Cup 2023 Final Moves to Tie Breakers