Posted on: August 23, 2023 Posted by: Thilagavathi Comments: 0

இயற்கை எழில் சூழ்ந்த பசுமை போர்த்திய குன்றுகள் கண்களை கவரும் சிறுமலை சுற்றுலாப் பயணம் வாங்கப் பார்க்கலாம்

Sirumalai Hills 

சிறுமலை (Sirumalai Hills) திண்டுக்கல் தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட மாநகராட்சியாகும். இப்பகுதியை சுற்றிலும் மலைகளும் குன்றுகளும் இருப்பினும் திண்டுக்கல் நத்தம் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் பாதையில் அமைந்துள்ள சிறுமலை தனி முக்கியத்துவம் பெற்று அமைந்துள்ளது.

sirumalai dindigul

சிறுமலை 60000 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய பகுதியாகும். திண்டுக்கல்லிலிருந்து 25 கி.மீ. (16 மைல்கள்), மதுரையிலிருந்து 40 கி.மீ. (25 மைல்கள்) திருச்சியிலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. உயர்ந்த மலைகளைக் கொண்டது. கொடைக்கானல் மலையைவிட அதிகமாக 18 கொண்டைஊசி வளைவுகளைக் கொண்டது. இங்கு கில்லாக் இன்டர்நேஷனல் பள்ளி உள்ளது. அடர்ந்த காடுகளும், நல்ல சீதோஷன நிலையையும் கொண்டது.

Sirumalai land

முக்கிய இடங்கள் (Sirumalai Hills)

சிவன் கோவில்

பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியில் ஒரு சிவன் கோவில் உள்ளது. புள்ளிமான், குரைக்கும் மான், எலி மான் போன்ற மான் வகைகள் இங்கு காணப்படுகின்றன. காட்டுப்பன்றி, சோம்பல் கரடி, குள்ளநரி, மெல்லிய லோரிஸ் மற்றும் சிறுத்தை போன்ற மற்ற காட்டு விலங்குகளும் இந்த இடத்தில் வசிக்கின்றன. செப்டம்பர் மாதம் ஆரோக்கி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெறும். செல்வி கோவில் நீ்ள் வட்ட வடிவில் சின்னமலைக்கும் திண்டுக்கல்லுக்கும் நடுவில் இயற்கை எழில்மிகு பார்வையில் இக்கோவில் அமைந்துள்ளது.

சிறுமலை நீர்த்தேக்கம்

2010ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறு நீர்த்தேக்கமாகும். அடர்ந்துயர்ந்த மரங்களுக்கிடையே அமைந்துள்ளது. படகு சவாரியும் இதில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதியில் போதுமான நீர் இருந்தால் மட்டும் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது.

Sirumalai River

உயர் கோபுரம்

சிறுமலையின் 17வது கொண்டைஊசி வளைவில் இவ்விடம் அமைந்துள்ளது. அங்கிருந்து கீழே தெரியும் அற்புதமான இயற்கை காட்சிகளைக் கண்டுகளிக்க மிகவும் அருமையான இடம்.
திண்டுக்கல் நகரப்பகுதி முதல் சிறுமலையின் பிற மலைப் பகுதிகள் வரை கண்டுகளிக்கலாம்.

சஞ்சிவனி மலை

சிறுமலையின் ஒருபகுதியாக  இம்மலை உள்ளது. ராமாயணத்தில் ராவணனுடன் யுத்தம் நடந்தது. யுத்ததில் மயக்கமுற்ற லக்குமனனை எழுப்புவதற்குத் மூலிகை தேவைப்பட்டது. அதனை எடுத்துவர சென்ற அனுமான் மூலிகையை கண்டிறிய ஐயமுற்று மலையையே தூக்கிச் சென்ற போது அம்மலையிலிருந்து விழுந்த ஒரு சிறு துண்டாக சஞ்ஜீவினி மலை கருதப்படுகிறது.

சாதியாறு

சிறுமலையிலிருந்து புறப்படும் இந்நதி தென்புறமாக ஓடி வைகையில் கலக்கிறது. இக்கழிமுகப் பகுதி 819 சதுர கி.மீ. (316 ச.மைல்). நீர் பாய்ச்சல் பரப்பு 4279.89 ஹெக்டேர் (10575.8 ஏக்கர்).
வாடிப்பட்டி அருகில் இவ்வாற்றின் குறுக்கே சாதியாறு அணை விவசாய பாசனத்துக்காக கட்டப்பட்டுள்ளது. பாசன பகுதிகள் மதுரை மாவட்டத்திலுள்ளன.

வெள்ளிமலை முருகன் கோவில்

சமவெளியிலிருந்து 45 நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் மலையில் அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களுக்கும் இக்கோவில் அமைந்துள்ளது.

Vellimalai Sivan Temple

கான்டிஜ் எஸ்டேட்

சிறுமலையில் 1000 ஏக்கர்களைக் கொண்டு அமைந்துள்ளது. இதிலிருந்து 3 ஆறுகளும் 2 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இப்பகுதியில் 120-132 செ.மீ. அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழையாகப் பொழிகிறது. 20-30000 ஏக்கர் காடுகளைக் கொண்டுள்ளது. மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை வளமாக உள்ளது. காடு ஒழிப்பை தடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையைப் பாதுகாக்கும் அரனாக இம்மலை உள்ளது.

அகஸ்தியர்புரம்

அகஸ்தியர் என அழைக்கபட்ட சித்தர் இங்கு தங்கியிருந்ததால் இப்பகுதி அகஸ்தியர்புரம் என அழைக்கப்படுகிறது. பழங்காலம் முதல் பல்வேறு சித்தர்கள் வசித்த இடமாக கருதப்படுகிறது.
மருத்துவ தாவரங்களும், மூலிகைச் செடிகளும் இங்கு அதிகம் காணப்படுகிறது. இப்பகுதியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது.

வெள்ளிமலை

அகஸ்தியர் புரத்தில் வெள்ளிமலை காணப்படுகிறது. சிறுமலையிலேயே மிக உயர்ந்த மலை இதுவாகும். இம்மலையின் உச்சி முழுவதும் வெள்ளியாக இருந்தது. கலியுகத்தில் மக்களால் இது திருடப்பட்டுவிடும் என்பதால் அகஸ்தியர் இதனை பாறைக் கல்லாகி மாற்றிவிட்டதாகக் கூறுகின்றனர். இம்மலையின் உச்சியில்தான் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ லிங்கம் காணப்படுகிறது. 30-45 நிமிடங்கள் நடந்துசென்று இவ்வுச்சியை அடையலாம்.

Sirumalai Farmers

சிறுமலை அடைவது எப்படி

வான் வழியாக மதுரை விமான நிலையம் அருகிலுள்ளது.

தொடர்வண்டி வழியாக அருகில் உள்ள ரயில் நிலையம் திண்டுக்கல்.

சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.

கொடைக்கானலை மிஞ்சும் இயற்கை அழகு கொண்ட சுற்றுலாத்தலங்கள் நம்ம திருச்சியில் வாங்க பார்க்கலாம்

 

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment