
கொடைக்கானலை மிஞ்சும் இயற்கை அழகு கொண்ட சுற்றுலாத்தலங்கள் நம்ம திருச்சியில் வாங்க பார்க்கலாம்
#4 Hills Tourist Places in Trichy
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்களாக ஸ்ரீரங்கம், சமயபுரம், வெக்காளியம்மன் கோயில்கள், ரத்தர்ஷா தர்கா, புனித லூர்து அன்னை ஆலயம் போன்ற வழிபாட்டுத்தலங்களே திருச்சி என்றவுடன் நினைவுக்கு வரும் இடங்களாக உள்ளது. திருச்சி மாவட்டத்திலும் திருச்சியை சுற்றி உள்ள பகுதிகளிலும் சூழ்ந்துள்ள மலைகள் திருச்சியினுடைய முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன.
- கொல்லிமலை
- பச்சை மலை,
- சிறு மலை,
- புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி
ஆகியவை பெரிய விளம்பரங்கள் இல்லாத திருச்சிக்கு அழகு சேர்க்கும் முக்கிய இயற்கை சுற்றுலா மையங்களாக உள்ளது.
கொல்லிமலை
- இந்தியாவின் தெற்குப் பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். 1000 முதல் 1300 மீ. உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது.
- இதன் உயர்ந்த சிகரம் 4663 அடி (1400 மீ.) ஆகும். உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் ‘கொல்லி’ என்னும் பெயர் அமைந்தது. இதை வேட்டைக்காரன் மலை என்றும்அழைப்பர்
- இம்மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளினால் ‘மூலிகைகளின் ராணி‘ என்றும் அழைக்கப்படுகிறது. கொல்லிமலையில் பல அழகிய நீர்வீழ்ச்சிகள்,
பள்ளத்தாக்குகள், வியூபாயின்ட்கள் ஆகிய முக்கிய இடங்களை கொண்டுள்ளது. - கொல்லி மலைக்கு அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வராததால் கொல்லிமலையின்
இயற்கை அழகு இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பச்சைமலை (#4 Beautiful Hills Station around Trichy )
- பச்சைமலை தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி,பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பரவி நிற்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்த ஒரு மலைத்தொடர் ஆகும்.
- தமிழ் நாட்டில் உள்ள கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை போன்ற மலைத் தொடர்களுள் ஒன்று. பழம்பெரும் பாடல்களில் பச்சைமலை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
- திருமாலைப் பற்றி பாடிய ஆழ்வாரும் “பச்சைமா மலை போல் மேனி” என்று குறிப்பிடுகிறார். சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் பச்சைமலையில் உற்பத்தியாகின்றன.
- பச்சைமலை சங்ககாலத்தில் ‘விச்சிமலை’ என்று அழைக்கப்பட்டது. மலையஞ்சிவந்தி எனப்படும் விச்சிப்பூ இம்மலையில் இக்காலத்திலும் மிகுதியாகப் பூக்கிறது. கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள பச்சைமலை, திருச்சியிலிருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
- அடர்ந்த சிறு சிறு மலைகள், அடர்த்தி நிறைந்த மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகளின் கூட்டம் என்று கடல் மட்டத்திலிருந்து 2,400 அடி உயரத்தில் அமைந்துள்ள பச்சை மலையில் எப்பொழுதுமே ஒரு மிதமான வானிலை நிலவுகிறது. இதனால் பச்சை மலைக்கு வருபவர்களுடைய எண்ணிக்கை அதிகம்.
சிறுமலை
- திண்டுக்கல்லுக்கு 25 கிலோமீட்டர்கள் (16 mi) அருகிலும், மதுரைக்கு 40 கிலோமீட்டர்கள் (25 mi) அருகிலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் நிறைய மலைக்குன்றுகள் உள்ளன.
ஆண்டு முழுவதும் நடுத்தரமான சூழலில் இருக்கக் கூடிய காட்டுப் பகுதியில் விதவிதமான செடிகளும் விலங்குகளும் வாழ்கின்றன. - சிறுமலையில் விளையும் மலைவாழைப் பழங்கள் இனிப்பு மிகுந்தவை மற்றும் புராணங்களில் கூறப்படும் அனுமன் இமயமலையை கையில் கொண்டு செல்லும் போது சிந்திய சிறு மண்ணே பிறகு சிறுமலை என உருவாகியது என அங்குள்ள மக்களால் கூறப்படுகிறது.
- மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இங்கு அரிய வகை மூலிகைகள் உள்ளன. எலுமிச்சம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் அதிகமாக விளைகின்றன. இங்கு எப்போதும் இதமான சூழ்நிலை நிலவுகிறது.
- சிறுமலை வாழைப்பழம் பழனி முருகன் கோவிலுக்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கு அரிய விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன.
புளியஞ்சோலை
- தமிழ்நாட்டின், கிழக்குத் தொடர்ச்சி மலையின் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு சிறு வனக் கிராமம். சுமார் 30 குடும்பங்கள் வாழ்கின்றன. இது திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் (சுமார் 30 கி.மீ) துறையூர் ஆகும்.
- திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை திருச்சி சுற்றுலா தளங்களில் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமானவை இங்குள்ளன.
மேலும் திருச்சியில் காணத்தக்க இடங்கள்(#4 Beautiful Hills Station around Trichy)
- திருவரங்கம், (ஸ்ரீரங்கம்)
- ஜம்புகேஸ்வர் திருக்கோவில், திருவானைக்காவல்
- மாரியம்மன் கோவில், சமயபுரம்
- புனித மரியன்னை பேராலயம் , மேலப்புதூர்
- நாதிர்ஷா தர்கா
- பச்சமலை
- புளியஞ்சோலை
- முக்கொம்பு
- வண்ணத்துப்பூச்சி பூங்கா, மேலூர் (ஸ்ரீரங்கம்)
- கோளரங்கம்
- அரசு அருங்காட்சியகம்
- கல்லணை
Click to rate this post!
[Total: 0 Average: 0]