வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி – தமிழக மின்வாரியம்
Electricity Bill Payment
மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்ற நிலையில் வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்வாரியம் ( Electricity Bill Payment) அறிமுகம் செய்துள்ளது.
தமிழக மின்வாரியம் சார்பில் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என மொத்தம் 3.5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தைக் கணக்கெடுக்க இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்படுகிறது. இந்த மீட்டரில் பதிவாகும் மின்நுகர்வை மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்து அதற்கேற்ப மின்கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். இந்த மின்கட்டணத்தை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் உள்ள கவுன்ட்டர்கள், மொபைல் செயலி மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி உள்ள நிலையில், வாட்ஸ்-அப்மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 500யூனிட்டுக்கு மேல் மின் பயன்பாட உள்ள நுகர்வோர் வாட்ஸ்-அப் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம். நுகர்வோர் தங்களுடைய மின்இணைப்புடன் வாட்ஸ்-அப் வசதியுடன் கூடிய மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் மின்கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படும். நுகர்வோர் தங்களுடைய வாட்ஸ் அப்பில் யுபிஐ மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம்.